தடாலடியாக அதிகரிக்கும் பெட்ரோல் விலை!!!
கொரோனா ஊரடங்கால் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தன. மே மாதத்தில் சர்வதேச அளவில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கேற்ப மத்திய அரசின் கலால் வரி உயர்வு, மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி அதிகரிப்பு போன்றவற்றால் ஜூன் 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க ஆரம்பித்தது.
தொடர்ந்து தினமும் விலை அதிகரித்து வந்த நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல் விலைநேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.84.26ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் விலை தொடர்ந்து 26ஆவது நாளாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. சுமார் ஒன்றரை மாதங்கள் பெட்ரோல் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.