கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 43 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக நேற்று முன் தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதே போல டாஸ்மாக்கை திறக்கலாம் என அனுமதியளித்த நீதிமன்றம், உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது.ஆனால் இது குறித்து நேற்று எழுந்த அவசர வழக்கில் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படாததால் டாஸ்மாக்குகளை மூட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. டாஸ்மாக்குகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற வீடியோக்களும் போட்டோக்களும் சமர்பிக்கப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், டாஸ்மாக்கை மூடச் சொல்லிய உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் டாஸ்மாக்கை திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்
சரிபார்க்கவும்
Close
-
அதிமுக கொடியுடன் தமிழகம் நோக்கி சசிகலா
5 days முன்பு