கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஜூன் 30-ம் தேதியுடன் முடியும் ஊரடங்கை வருகின்ற ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மேற்கு வங்க முதல்வர் ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களும் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘ஊரடங்கை’ நீடித்துக்கொண்டே சென்றாலும் கொரோன கட்டுக்குள் வருமா வராத என்பது கேள்வி குறி என்றே கூறலாம்.