நீலகிரி மாவட்டம் கூடலூரில் கொரோனா பெட்டிக்கடை என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள கடை மக்கள் மத்தியில் பரவலாகக் கவனம் பெற்றிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய நீதிமன்றம் செல்லும் சாலையோரத்தில் உள்ள ஒரு சிறிய உணவகக் கட்டடத்தின் ஒரு பகுதியில் சிறிய பெட்டிக்கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டிக்கடை ஒன்றும் விசேஷமானது அல்ல. அந்தக் கடைக்கு வைக்கப்பட்ட பெயர்தான் விசேஷமானது. காரணம் அந்தப் பெட்டிக்கடைக்கு கொரோனா என பெயர் வைக்கப்பட்டிருப்பதுதான்.
புதிதாக கடைத்திறந்து கடை திறந்த அந்த நபர் பெயர் ரமணா
.கேரள மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் துணிக்கடையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைசெய்து வந்தேன். கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களுக்கு முன்பே கடைகளை அடைத்து சொந்த ஊருக்கு போகச் சொல்லிவிட்டார்கள்.
படாதபாடுபட்டு இங்கு வந்தேன். இங்கு வந்தும் எந்த வேலை வாய்ப்பும் இல்லை. 80 நாள்களாக வீட்டிலேயே இருந்தேன். சமீபத்தில் மீண்டும் கேரளாவில் ஒரு வேலை கிடைத்தது. அங்கு வரச்சொன்னார்கள். கிளம்பத் தயாரானபோது மீண்டும் ஊரடங்கு என அறிவித்தார்கள்.
வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும்போதுதான் அருகில் இருந்த ஹோட்டலின் ஒரு பகுதியில் பெட்டிக்கடை வைத்துக்கொள்கிறேன் என கேட்டேன். அவர்களும் சம்மதித்தார்கள்.
கொரோனாவால்தான் வாழ்வாதாரத்தை இழந்தோம். சரி, அது பெயரிலேயே வாழ்க்கையைத் துவங்கலாம் என முதலீடு செய்து கடைபோட்டு கொரோனா என பெயர் வைத்தேன். கடை வைத்து ஒரு வாரம் கூட ஆகவில்லை ஊர் முழுக்கத் தெரிந்துவிட்டது. வியாபாரமும் பரவாயில்லை” என ரமணா தெரிவித்துள்ளார்.
அதன் அருகே இருக்கும் உணவகத்தின் பெயர் அடேங்கப்பா ஹோட்டல். சாலையில் செல்லும் அனைவரையும் ஒருமுறை திரும்பி பார்க்கவைக்கிறது இந்த கொரோனா பெட்டிக்கடை.