1999-ஆம் வருடம் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் படையப்பா. கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் தனது சொத்தை எல்லாம் இழந்த ரஜினி, தனது அப்பா கடைசியாக வைத்திருந்த க்ரானைட் மலையின் மூலம் கோடீஸ்வரனாவார்.
இந்நிலையில் டான்சானியா தேசத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. ‘டான்சானியாவில் சுரங்கம் வைத்திருக்கும் Saniniu Laize என்பவர் தனது சுரங்கத்தில் கிடைத்த டான்சைட் எனப்படும் உயர்ரக கல்லை, அரசாங்கத்திடம் விற்று இலட்சாதிபதி ஆகியுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சங்களுக்கு இந்த கற்கள் விலை போயிருக்கனவாம். மேலும் இந்த பணத்தில் என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டதற்கு, ”இதில் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டுவேன். அப்போதுதான் இங்கு இருப்பவர்கள் எளிதில் வந்து படிக்க முடியும்” என தெரிவித்திருக்கிறார் இந்த நல்ல உள்ளம் படைத்தவர்.