கோவை இராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்தவர் கனகராஜ் . 70 வயதான இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றார். நேற்று பிற்பகல் கடைக்கு திண்பண்டம் வாங்க வந்த 10 வயது சிறுமியை, கனகராஜ் கடையில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
வீட்டிற்கு சென்ற சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறவே, அவர்கள் இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் 70 வயதான மளிகை கடை உரிமையாளர் கனகராஜை இராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல், மனித உயிருக்கு ஊறு விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளில் இராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.