இந்தியாசென்னைவிளையாட்டு

தல தோனி பற்றி புகழ்ந்து வீடியோ வெளியிட்ட பிராவோ !!

தல என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ அவர்கள் பாடல் ஒன்று பாடியுள்ளது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தல தோனி கேப்டனாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புகழ்பெற்ற வீரராக இருப்பவர் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த பிராவோ. இவர்கள் இருவரும் இணைந்து பேட்டிங் செய்யும்போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்பது தெரிந்ததே. மேலும் தோனியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பிராவோ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தோனியின் புகழ் குறித்து பிராவோ ஒரு பாடலை பாடியுள்ளார் பிராவோ . இந்த பாடலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தோனியின் புகழ் பாடும் இந்த பாடலை தற்போது தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ஏற்கனவே தமிழ் திரைப்படமான ’சித்திரம் பேசுதடி 2’ என்ற திரைப்படத்தில் தமிழ்ப்பாடல் ஒன்றை பாடி அதற்கு பிராவோ நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பிராவோ தனது திறமைகளை இந்தியாவில் மீண்டும் காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

 

 

 

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.