கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக ரோபோவை வடிவமைத்துள்ள அண்ணா பல்கலைக்கழகம்…!
கொரோனா நோயாளிகள் மற்றும் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களுக்கு உதவக்கூடிய வகையில் பிரத்யேக ரோபோ ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. வைஃபை வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை 500 மீட்டா் தொலைவிலிருந்து இயக்க முடியும். இந்த ரோபோ நோயாளிகளின் உடல் நிலையை கண்காணிக்க மட்டுமின்றி அவா்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல, கிருமிநாசினிகளை தெளிக்கவும் உதவுகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவா்களும், செவிலியா்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருவதைத் தவிர்க்க இந்த ரோபோ பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி வளாகத்தில் பேராசிரியா் தியாகராஜன் தலைமையிலான குழுவினா் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனா்.