தகவல்கள்

கொரோனாவை குணமாக்க நரபலி : ஒடிசாவில் திக் சம்பவம்…!!!

ஒடிசாவில் கோயிலுக்கு சாமி கும்பிட பக்தரை பூசாரி ஒருவர் கொரோனாவை குணமாக்க நரபலி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டக்கில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக 72 வயது சன்சரி ஓஜா பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நெடுங்காலமாக அந்த கோயிலில் பூசாரியாக இருந்ததால் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கோயிலுக்கு வந்த பக்தர் சாமிக் கும்பிட்டு கொரோனா சீக்கிரம் இந்த உலகை விட்டு அழிக்கப்படவேண்டும் என பூசாரியிடம் பேசியுள்ளார். அவருக்குப் பதிலளித்த பூசாரி,’ உன்னை நரபலிக் கொடுக்க சொல்லி கடவுள் என்னிடம் கூறினார்’என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியான அந்த நபர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் எதிர்ப்பை மீறி அவரை வெட்டி பலிக் கொடுத்துள்ளார் பூசாரி. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க பூசாரியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.