தொழில்
கைத்தறி மற்றும் நெசவாளர்களுக்கு தலா “2 ஆயிரம்” ரூபாய் நிவாரணம்!
கைத்தறி மற்றும் நெசவாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊரடங்கின் காரணமாக நெசவாளர்கள் வேலையின்றியும் வருமானமின்றியும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் கைத்தறி மற்றும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஊரடங்கு கால நிவாரணத் தொகையாக நெசவாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நெசவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு விண்ணப்பித்து நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.