குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க என்ன செய்வது..?
ஒரு நாளைக்கு தொடர்ந்து இரண்டு மணி, மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு அதன் திரை வெளிச்சம் கண்களைப் பாதிக்காமல் இருக்க இவற்றை செய்யுங்கள்.ஆன்லைன் வகுப்புகளுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் குழந்தைகளுக்கு இது புதுமையான நெருக்கடி எனலாம். இருப்பினும் இது தற்காலிகம்தான் என்பதை நினைவுப்படுத்திக்கொள்வதால் சற்று ஆறுதலான விஷயமாக இருக்கும். எனவே ஒரு நாளைக்கு தொடர்ந்து இரண்டு மணி, மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு அதன் திரை வெளிச்சம் கண்களைப் பாதிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
முதலில் நீங்கள் பயன்படுத்தும் லாப்டாப் அல்லது கணினியை மிகவும் நெருக்கமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் கண்களுக்கு மிகவும் அழுத்தம் கொடுப்பதாக இருக்கும். எனவே குறைந்தது 18 முதல் 24 இஞ்ச் இடைவெளியில் வைப்பது கண்களுக்கு நல்லது. கணினி குழந்தையின் கண் அளவுக்கு நேராக இருப்பது நல்லது. இதனால் குனிந்தோ, நிமிர்ந்தோ பார்ப்பதால் கழுத்து வலி , தோள்பட்டை வலி இல்லாமல் இருக்கும். அதிக சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம். தொடந்து 20 நிமிடங்களுக்கு கண்களை அப்படியே திரைகளைப் பார்த்தவாறு இருக்க வேண்டாம். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை திரை அல்லாத விஷயங்களைப் பார்த்தல் நல்லது.
அடிக்கடி கண்களை திறந்து மூடுவது, கண்களை சிமிட்டுவது நல்லது. இதனால் கண்கள் வறண்டு போகாமல் இருக்கும். 30 நிமிடங்களில் 10 முறையேனும் கண்களை மூடி திறக்கச் சொல்லுங்கள். இதுவும் கண்கள் வறண்டு போகாமல் இருக்க உதவும். கண்களில் எரிச்சல் இருக்காது. கணினியின் திரை வெளிச்சத்தை குறைத்து வையுங்கள். அதேசமயம் அதிகமாகவும் குறைக்கக் கூடாது. இதனால் மிகவும் சிரமப்பட்டு பார்க்க நேரிடும். எனவே குழந்தையின் சௌகரியத்திற்கு ஏற்ப ஆலோசனையைக் கேட்டு திரை வெளிச்சம் வையுங்கள். கணினியின் திரை வெளிச்சத்தை குறைத்து வையுங்கள். அதேசமயம் அதிகமாகவும் குறைக்கக் கூடாது. இதனால் மிகவும் சிரமப்பட்டு பார்க்க நேரிடும். எனவே குழந்தையின் சௌகரியத்திற்கு ஏற்ப ஆலோசனையைக் கேட்டு திரை வெளிச்சம் வையுங்கள்.