டார்க் வெப்பில் விற்பனை செய்யப்படும் தகவல்கள்..வொர்க் ஃப்ரம் ஹோம் பண்றவங்க ஜாக்கிரதை!
வீடியோ கான்ஃபரன்சிங் செயலியான ஜூம் செயலியில் 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பெருமளவில் தாக்கத்தை உண்டுபண்ணிக் கொண்டிருப்பதால், கொரோனா பரவுவதலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு முறைகள் கையாளப்பட்டுள்ளன. இதனால் பலரும் வீட்டில் இருந்தே பணிபுரிகின்றனர். இதற்கென பல்வேறு செயலிகளை பயன்படுத்துகின்றனர்.
அவற்றுள் முக்கியமான ஜூம் செயலியை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தத் தொடங்கினர். இதில் இந்த தளத்தை பயன்படுத்தும் பயனாளர்களின் பெயர், விபரங்கள் உள்ளிட்டவற்றுடன் கூடிய 5 லட்சம் கணக்குகள் டார்க் வெப் எனப்படும் இருள்வலை தளத்தினால் திருடப்பட்டு ஒரு கணக்கு 15 பைசாவுக்கு சர்வதேச வலைதளங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிப்புகள் – வெப்கேம் அல்லது மைக்ரோஃபோன் பாதுகாப்பு முதல் கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள் அல்லது சாதனத் தகவல் போன்ற முக்கியமான தரவு வரை அனைத்தும் இருண்ட வலையில் விற்கப்படுகின்றன.
ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் அதன் பங்குதாரர்களில் ஒருவரால், ஜூம் நிறுவனம் தனது சில பாதுகாப்பு குறைபாடுகளை மறைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யும் நபர்கள் கவனமாக இருப்பது நல்லது.மிகவும் முக்கியமான தகவல்களை இந்த செயலியில் பகிர்வதை தவிர்த்திடுங்கள்.
பாதுகாப்பான உபயோகத்திற்காக நம் இந்தியா அரசு சில வழிமுறைகளை கூறியுள்ளது , அவை:
- ஒவ்வொரு கூட்டத்திற்கும் (மீட்டிங்) புதிய பயனர் மற்றும் கடவுச்சொல்லை அமைத்தல்
- காத்திருப்பு அறையை இயக்குதல், இதனால் ஒவ்வொரு பயனரும் கூட்டத்தை நடத்தும் ஹோஸ்ட்டின் அனுமதி இருந்தால் மட்டுமே மீட்டிங்யில் நுழைய முடியும்.
- ஹோஸ்டுக்கு முன் யாரும் உள்ளே செல்ல அனுப்பிக்கப்பட கூடாது.
- ஹோஸ்ட் மட்டுமே ஸ்கிரீன் பகிர்வை அனுமதிக்க வேண்டும்.
- நீக்கப்பட்ட பங்கேற்பாளர்களை மீண்டும் சேர அனுமதிக்க கூடாது.
- ஃபைல் பரிமாற்ற விருப்பத்தை முடக்க வேண்டும்.(தேவையில்லை என்றால்)
- பங்கேற்பாளர்கள் அனைவரும் சேர்ந்தவுடன் கூட்டத்தை பூட்ட வேண்டும்.
- பதிவு செய்யும் அம்சத்தை அனுமதிக்க கூடாது.
- நீங்கள் நிர்வாகியாக இருந்தால் சந்திப்பை சரியாக முடிக்க வேண்டும்.