கதைகள்தமிழ்நாடு

பாப் கட்டிங் வைத்திருக்கும் ஸ்டைலிஷ் யானை… மன்னார்குடி கோவில்லில் இருக்கும் கலக்கலான யானை

மன்னார்குடி ராஜகோபல சுவாமி கோயில் இருக்கும் இந்த அசத்தலான யானை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யானைகள் பிடிக்காத குழந்தைகள் கண்டிப்பாக இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் யானை என்றால், கொள்ளை பிரியம். அப்படிப்பட்ட யானைக்கு மேக்கப் மற்றும் ஸ்டைலிஸ்சாக மாற்றினால், பார்ப்பதற்கே எவ்வளவு ரம்யாமாக இருக்கம். அப்படி தான், காட்சி தருகிறது மன்னார்குடி ராஜகோபல சுவாமி கோயில் யானை செங்கமலம்.

அந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள், அந்த யானையைச் செங்கமலம் என்றே தான் அழைப்பார்கள். மன்னார்குடி மக்களின், ராஜகோபலசுவாமி கோயில் பக்தர்களின் செல்லப் பிள்ளை இந்த செங்கமலம் யானை.

மன்னார்குடியில், பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ராஜகோபால சுவாமி கோயிலின் நுழைவாயிலில் நின்று பக்தர்களை வரவேற்கிறது. இந்த செங்கமலம் யானையை, அதன் பாகன் பாப் கட்டிங் ஸ்டைலில் முடிவெட்டி மேக்கப் போட்டுத் தொடர்ந்து பராமரித்து வருகிறார். இதன் காரணமாக எப்போதுமே இந்த பாப் கட்டிங் ஸ்டைலிலேயே கோயிலில் உலா வருகிறது இந்த கோயில் யானை.

கோயிலுக்கு வரும் பக்தர்கள், யானை செங்கமலத்தின் பாப் கட்டிங் ஸ்டைல் மற்றும் அதன் அழகில் மயங்கி, செங்கமலத்தைப் பார்த்து வியந்து நின்று ஆச்சரியத்துடன் பார்த்து ரசிக்கிறார்கள். மேலும், மகிழ்ச்சியுடன் செங்கமலம் யானையோடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்களது செல்போனில் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.

மேலும், அந்த பகுதி மக்கள் பாப் கட்டிங் செங்கமலம் என்றே, அந்த பகுதி மக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் அன்போடு அழைக்கின்றனர். அத்துடன், யானை தொடர்ந்து பராமரித்து வரும் அதன் பாகனையும் அழைத்துப் பாராட்டி, அவரைப் பற்றியும் விசாரிக்கின்றனர்.

யானை செங்கமலம் பற்றி அதன் பாகன் கூறும் போது, “ எனக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனாலும், என் மூத்த பிள்ளை இந்த யானை தான். என் பிள்ளையைப் போல் நினைப்பதால், என் குழந்தைக்கு நான் எப்படி சேவை செய்வேனோ, அது போலவே யானைக்கு அழகாகத் தலை முடியை வெட்டி விட்டு, அழகு படுத்துகிறேன்” என்றும் தெரிவித்தார்.

இந்த யானைக்கு முடி தொடர்ந்து நிறைய வளர்ந்துகொண்டே இருந்ததால், யானையே தன் முடியைத் தும்பிக்கையால் பிய்த்து எடுத்து கொண்டு இருந்தது.அதனால் , யானையின் பாகனே, யானையை ஒரு குழந்தையைப் போல் பாவித்து, அதற்கு பாப் கட்டிங் ஸ்டைலில் முடி வெட்டி விட்டு அழுகு படுத்தி உள்ளார். பாகனுக்கு, இந்த கெட்டப் ரொம்பவே பிடித்துப்போய் விட்டது.
இதனையடுத்து , யானையை இப்படி அழகாக மாற்றிய பாகனை அழைத்து அனைவரும் பாராட்டி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர். அதன் படி, பாகனும் யானை இப்படியே தொடர்ந்து பராமரித்து வருகிறார்.

முக்கியமாக, தினமும் காலை மாலை என இரு வேளையும் யானையைக் குளிப்பாட்டி அழுகு படுத்தி விடுகிறார் அதன் பாகன். யானையைக் குளிப்பாட்டிய பிறகு, தலை சீவி மேக்கப் போடுவதற்கு ஒவ்வொரு தடவையும் அரை மணி நேரத்துக்கு மேலாகப் பாகன் நேரம் எடுத்துக்கொள்கிறார். யானையை இப்படி அழகு படுத்த கோயில் நிர்வாகத்திலும், நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள். இதனால், மன்னார்குடியில் யானை செங்கமலம், அனைத்து தரப்பினருக்கும் நல்ல பரிச்சியம் ஆனதோடு, அந்த ஸ்டைலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.