டெல்லியில் எம்பிக்கள் வசிப்பதற்காக கட்டப்பட்ட குடியிருப்பை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
புதுடெல்லி:டெல்லி பி.டி.மார்க் பகுதியில் உள்ள 80 வருட பழமையான 8 பங்களாக்கள் புதுப்பிக்கப்பட்டு எம்பிக்கள் வசிப்பதற்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மழைநீர் சேகரிப்பு, சூரிய மின்சக்தி, எரிசக்தி சேமிப்பு போன்ற முறைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்று குடியிருப்புகளை திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர், பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருப்பதாகவும், வேறு சில திட்டங்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.விழாவில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.