கைகுலுக்குவது மற்றும் கட்டிப்பிடிப்பதை குறைப்பது கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க உதவும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் நாவல் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க சீனாவின் வுஹானில் உள்ள மக்கள் கைகுலுக்கலுக்கு பதிலாக கால்களை அசைத்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறது ,இதனால் அவர்கள் COVID-19 பரவலைத் தடுக்க முடியும் என நம்பப்படுகிறது.
மேலும் பல நாடுகளில் புது புது விதங்களில் கைகுலுக்கும் முறை பின்பற்றி வரப்படுகிறது.
வுஹான் ஷேக்” ஆப்பிரிக்காவுக்கு வந்துள்ளது, அங்கு தான்சானியாவின் ஜனாதிபதி ஜான் மகுஃபுலி மாலிம் சீஃப் ஷெரீப் ஹமாத்தை ஸ்டேட் ஹவுஸில் ஒரு பாரம்பரிய ஹேண்ட்ஷேக்கிற்கு பதிலாக “லெக் ஷேக்” மூலம் வரவேற்றார்.
பிரான்சின் சுகாதார மந்திரி, பிரெஞ்சு மக்களை இரட்டை கன்னத்தில் முத்தம் செய்வதை தவிர்க்குமாறு வலியுறுத்திருக்கிறார். அதே நேரத்தில் மலேசியர்கள் கைகளை அசைப்பதற்கு பதிலாக ஒரு கையை மார்பின் மீது வைப்பதன் மூலம் “சலாம் மலேசியா” சைகையைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் முழங்கையை மோதி வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றனர்.
ஈரானில் இனி இந்தியாவில் கூறுவதை போல் நமஸ்ட்டே சொல்லி கொள்ளுவோம் என்று அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இந்த முறையால் குறைந்த சனிட்டைசர் வீணாகும், சனிட்டைசர் பற்றாக்குறையை சமாளிக்க உதவும் .