உடல் முதிர்வு அடையும் உணவுகள்…
உடல் ஆரோக்கியத்திற்கு முக்கி பங்கு வகிக்கும் அதே உணவுகள் சில சமயம் நம் உடலுக்கு எதிரியாகவும் மாறலாம். அந்த வகையில் சில உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட்டால் விரையில் முதுமையான தோற்றத்தையும், அதற்கான அறிகுறிகளையும் இளமையிலேயே பெறுவீர்கள். எனவே நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன பார்க்கலாம். உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் தோல் பாதிக்கப்பட்டு அதன் இறுக்கமான தன்மை இழந்து சுருக்கம், பொலிவிழத்தல் போன்ற தோற்றத்தைப் பெறும்.
உடலில் விரைவில் நீரிழப்பை உண்டாக்கும் ஆல்கஹால் சருமத்தைதான் முதலில் நேரடியாக பாதிக்கிறது. அதன் விளைவு விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவீர்கள். உடலில் விரைவில் நீரிழப்பை உண்டாக்கும் ஆல்கஹால் சருமத்தைதான் முதலில் நேரடியாக பாதிக்கிறது. அதன் விளைவு விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவீர்கள். ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் என சுவைக்காக சாப்பிடும் இவை கொழுப்பு அமிலங்களை அதிகமாக உற்பத்தி செய்யக் கூடியவை. இதனால் இரத்த ஓட்டம் குறைந்து வயது முதிர்ச்சி உண்டாகிறது. கார்பனேட்டட் குளிர்பானங்கள் கொஞ்சமாக குடித்தாலும் அதில் ஆபத்துதான் நிறைந்துள்ளது என வல்லுநர்கள். குறிப்பாக விரைவில் உடலில் நீரிழப்பு செயலை செய்வதால் சரும நீரும் வற்றி முதுமையாக தோன்றுவீர்கள்.