நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை வைரஸிற்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த நெருக்கடி சூழலில் நாட்டு மக்கள் அனைவரும் மிகுதியான நேரம் அதிக பதற்றத்துடனேயே காணப்படுகின்றனர். மேலும் சிலர், ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே இருப்பதால் மனதளவில் அதிகம் பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், மக்களிடையே சற்று பதற்றம் தணிந்து மகிழ்ச்சியுடன் நம்பிக்கையளிக்க வேண்டி நாடெங்கும் உள்ள அறுபது மருத்துவர்கள் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
வீடியோவில், மருத்துவர்கள் அவரவர் வீடுகள் மருத்துவமனைகளில் இருந்து நடனமாடுவதைக் காணலாம்.
மும்பை, புனே, நாக்பூர், கொச்சி, டெல்லி, பெங்களூர், கன்னியாகுமாரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதியிலுள்ள மருத்துவர்கள் இணைந்து நடனமாடி, குதூகலமாகும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
“உங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்கும், நாட்டின் நலத்தை உறுதி செய்வதற்கும் நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். மேலும் உங்கள் மன நலனைக் கவனிக்கும்படி உங்களுக்கு நினைவூட்டுவதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம், ஏனென்றால் ஒரு உங்கள் நம்பிக்கையானது எங்களை மேலும் தூண்டுகிறது,” என்று அந்த வீடியோ தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ விரைவில் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவியது மற்றும் ஐபிஎஸ் மற்றும் டிஜி சத்ய பிரதான் உள்ளிட்ட பல முக்கிய நபர்களால் ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டது.