இரும்பு மழையாகப் பெய்யும் ஒரு புதிய கோள் – விண்வெளி அதிசயம்
நம் பிரபஞ்சத்தில் பூமி தவிர்த்து மனிதர்கள் வாழத் தகுதியான மற்றொரு இடத்தை விண்வெளி ஆய்வாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக தேடி வருகின்றனர்.
அத்தகைய ஒரு தேடலின்போது, பூமியில் இருந்து சுமார் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ‘மீனம் நட்சத்திர குழுவில்’ (Constellation of Pisces) ஒரு கோள் இருப்பது தெரியவந்தது.
வாஸ்ப் 76பி என்று அறியப்படும் இந்த கோள், அதனுடைய நட்சத்திரத்தை சுற்றி வரும்போது, அதன் பகல் பகுதி வெப்பநிலை 2,400 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கிறது. இந்த வெப்பநிலை உலோகங்களை ஆவியாக்கும் ன்மை கொண்டது.
இரவு நேரப் பகுதியில் இந்தக் கோளின் வெப்பநிலை 1400 டிகிரியாக குறைந்துவிடுகிறது. இந்த வெப்பநிலையில், பகல் நேரத்தில் ஆவியான உலோகங்கள் இறுகி மழையாகப் பெய்கின்றன.
இது ஒரு வினோதமான சூழல் என்று ஜெனீவாவை சேர்ந்த டாக்டர் டேவிட் ஹெரேயின்ச் விளக்கம் தருகிறார்.
வாஸ்ப் 76பி தன்னை தானே சுற்றிக்கொள்ள 43 மணி நேரமாகிறது. இந்த கோள் எப்போதும் தனது நட்சத்திரத்தை ஒரு புரத்தில் இருந்து மட்டுமே பார்க்க முடியும். நம் பூமியின் நிலவும் இதையே தான் செய்கிறது, நிலவின் ஒரு புறத்தை மட்டுமே நாம் பார்க்க முடியும்.
இதற்கு காரணம், சந்திரன் பூமியுடன் ஒரு பூட்டப்பட்ட சுற்றுப்பாதையில் இருக்கிறார். அலைகளின் பூட்டப்பட்ட சுற்றுப்பாதையே சந்திரனின் இருண்ட பக்கத்தை நாம் பார்க்க முடியாமல் செய்கிறது , ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும்.வாஸ்ப் 76பிக்கும் இந்த விதி பொருந்துகிறது.
WASP-76b இன் மாலை நேரம் மற்றும் பகல் நேரத்தின் எல்லையில் வளிமண்டலத்தில் இரும்பு நீராவி இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். “இருப்பினும், ஆச்சரியப்படும் விதமாக, நாங்கள் காலையில் இரும்பு நீராவியைக் காணவில்லை,” எஹ்ரென்ரிச் கூறினார். காரணம், “இந்த தீவிர எக்ஸோப்ளானெட்டின்(Exoplanet) இரவு நேரத்தில் இரும்பு மழை பெய்கிறது.”