இரவு தாமதமாக தூங்குவோர் கவனத்திற்கு..!
கொரோனா நெருக்கடி பலருடைய தூக்க நேரத்தை மாற்றி அமைத்துவிட்டது. குறிப்பாக இரவில் தாமதமாக தூங்கும் பழக்கம் பலரிடமும் அதிகரித்துவிட்டது. இந்த பழக்கமானது நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது அட்வான்ஸ் இன் நியூட்ரிஷன் வெளியிட்டுள்ள ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் இரவு தாமதமாக தூங்கும் பழக்கம் இதய நோய் , டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் இரவில் விழித்திருப்பதால் உணவுகளையும் இரவில் அதிகமாக சாப்பிடுகின்றனர். இது செரிமானத்தை பாதிக்கும். உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும். அதோடு கொழுப்பும் அதிகம் சேருகின்றன. இந்த இரண்டு பாதிப்புகளும் இதய நோய் மற்றும் நீரிழிவு நோயை உண்டாக்க காரணமாக இருக்கின்றன. எனவே, அதிக நேரம் விழித்திருக்காமல், நேரத்திற்கு தூங்கி எழுந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.