உணவுஉணவுகள்தமிழ்நாடு

இரண்டே பொருட்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான…சாக்லேட் மத்தாப்பூ எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க..

குழந்தைகளுக்கு சாக்லேட் என்றாலே கொள்ளை பிரியம்..அந்த சாக்லேட்டை வைத்து ஒரு அருமையான ஸ்வீட் ரெசிபி பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள் : 

  • 100 கிராம்டார்க் சாக்லேட்
  • ஸ்பிரிங்கிள்ஸ் சிறிதளவு

செய்முறை :

  • டார்க் சாக்லேட்டை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அடுப்பை அணைத்து அதன் மேல் ஒரு கண்ணாடி பவுல் லைத்து வெட்டிய சாக்லேட்டை அதில் சேர்க்கவும்.
  • தண்ணீரில் உள்ள சூட்டினால் சாக்லேட் மெல்ல உருக ஆரம்பிக்கும்.
  • நன்கு இளகி க்ரீம் பதம் வரும் வரை கலக்கி விடவும்
  • உருகிய சாக்லேட் கலவையை ஒரு டம்ளரில் ஊற்றி வைக்கவும்
    நீளமான மரக்குச்சிகளை டம்ளரில் விட்டு சாக்லேட்டால் புரட்டி பட்டர் பேப்பர் மேல் வைத்து அதன் மேல் ஸ்பிரிங்கிள்ஸ் தூவவும்.
  • சுவையான சாக்லேட் கம்பி மத்தாப்பூ தயார்.

இந்த சாக்லேட் கம்பி மத்தாப்பை பிரிட்ஜ்யில் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.