தகவல்கள்

திடீரென வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர் – Bigg Boss 4

தெலுங்கிலும் பிக்பாஸ் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நடிகை மோனல் கஜ்ஜார், அம்மா ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தெலுங்கு பிக்பாஸ் தொகுப்பாளரான நடிகர் நாகார்ஜூனா ‘வைல்ட் கார்ட்’ என்ற படத்தின் ஷூட்டிங்குக்காக சென்றுள்ளதால் நாகார்ஜூனாவின் மருமகளும் நடிகையுமான சமந்தா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு புதிய தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்திருக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் சமந்தாவின் வருகைக்கு பிறகு மிகவும் ஆவலோடு சென்று கொண்டிருக்கையில், போட்டியாளர் ஒருவர் உடல் நலக்குறைவால் வெளியேறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் நடிகர், ராப் பாடகர், தொகுப்பாளர் என பன்முக திறமையால் மிகவும் பிரபலமானவர் நோயல் சீன். இவருக்கு உடல் நலம் சரி இல்லாத காரணத்தால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். ஏற்கனவே 59 வயதான Gangavva எனும் யூடியூபர் ஒருவர் உடல் நலக்குறைவால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இவருக்கு வெளியில் ரசிகர் பட்டாளம் ஏராளம். பல மனங்களை வென்ற Gangavva கண்ணீருடன் வெளியில் சென்றது பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.