இந்தியாதகவல்கள்

பாஜக அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பாஜக அலுவலகத்தில் ரபேல் விமானத்தில் விநாயகர் செல்வதைப் போல அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பாஜக அலுவலகத்தில் இன்று காலை சிறப்பு விநாயகர் பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜையில் பாஜக தலைவர் முருகன் மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் பாஜக அலுவலகத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. 18 கைகளைக் கொண்ட சிலையாக வடிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை ரபேல் விமானத்தில் விநாயகர் செல்வதைப் போல அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக கொண்டு வந்த திட்டங்களை விநாயகர் வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கைகளிலும் ஒவ்வொரு திட்டத்தின் வரிகள் எழுதிய பேனர்கள் கையில் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.