கொரோனா விழிப்புணர்வூட்ட மதுரையில் ‘மாஸ்க்’ புரோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மக்களை மாஸ்க் அணிய வைப்பது என்பது சுகாதாரத்துறைக்கு இருக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் வசிக்கும் சுமார் 30 சதவீதம்பேர் மாஸ்க் அணிவதில்லை என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
கோயில் நகரமான மதுரையை தற்போது மாஸ்க் பரோட்டாக்கள் கலக்கி வருகின்றன. மாஸ்க் வடிவில் போடப்படும் பரோட்டாக்கள் மக்கள், முக கவசங்களை அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. முக கவசம் எப்படி இருக்குமோ அதே வடிவத்தில் பரோட்டாக்களை மாஸ்டர்கள் போடுகிறார்கள். இவை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் பூவலிங்கம் என்பவர் கூறுகையில், ‘மதுரை மக்களிடம் முக கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு குறைவாக காணப்படுகிறது. எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் பரோட்டாக்களை தயாரிக்கிறோம்’ என்று தெரிவித்தார். சமூக வலைதளங்களில் மாஸ்க் பரோட்டாக்கள் வைரலாகி வருகின்றன. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 24,879 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்ந்துள்ளது. இதில் 75 சதவீத பாதிப்புகள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன. மக்களை மாஸ்க் அணிய வைப்பது என்பது சுகாதாரத்துறைக்கு இருக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் வசிக்கும் சுமார் 30 சதவீதம்பேர் மாஸ்க் அணிவதில்லை என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. முன்னதாக கடந்த எப்ரல் மாதத்தின்போது கொரோனா வடிவில் இனிப்புகள் கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டன. இந்த சம்பவமும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.