கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஒருவர், முறையான சிகிச்சை செய்யப்படவில்லை என பதிவுசெய்த வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஹைதராபாத்தில் 34 வயதான நபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க அனுமதி மறுத்த பிறகு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அந்த நபர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். மகனின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு செல்போனை எடுத்த தந்தைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தனது மகன் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து தந்தைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதில் பேசிய அவரது மகன், ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை. நான் எவ்வளவு கெஞ்சி கேட்டும் மருத்துவர்கள் கடந்த 3 மணி நேரமாக வெண்டிலேட்டர் தரவில்லை. இனிமேல் என்னால் மூச்சுவிட முடியாது. என் இதயம் நின்று விடுவது போல் தோன்றுகிறது அப்பா’ என கூறியுள்ளார். இதனை பார்த்த தந்தை கண்கலங்கியுள்ளார். தற்போது தனது மகனின் இறப்புக்கு நீதி கேட்டு காவல்நிலையத்தை அணுகியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அவரது மறைவுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது.மருத்துவமனை கண்காணிப்பாளர் இதனை மறுத்து உள்ளார்.வெண்டிலேட்டர் வசதி தேவையான அளவு இருந்ததாகவும் , அதனை உணரமுடியாத அளவுக்கு நோயாளி முக்கியமான கட்டத்தில் இருந்ததாகவும் கூறிஉள்ளார்.
மேலும் அவர் , தீடிரென இதயம் வேலை செய்யாத காரணத்தால் தான் அந்த இளைஞர் இறந்ததாகவும் , 25 -40 வயது உள்ளவர்கள் மீது கொரோன ஒரு ஒரு முறையும் வித்தியாசமாக செயல்படுவதாகவும்.அவர்களுக்கு வேண்டிலெட்டர் வழங்கப்படுகிறது ஆனால் அதனை அவர்கள் உணர்வது இல்லை எனவும் தெரிவித்து உள்ளார்.