இந்தியாகதைகள்

“மற்றவர்களை உயர்த்துவதன் மூலம் நாம் உயர்கிறோம்” ஏழை எளிய மக்களுக்காக ₹.6.2 லட்சம் நீதி திரட்டிய 11 வயது மாணவி!!

ஹைதராபாத்தை சேர்ந்த ரித்தி என்ற 11 வயது சிறுமி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்க பொதுமக்களிடம் இருந்து ஆறு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதியாக திரட்டியுள்ளார்.

ஒரு பசியுள்ள நபருக்கு உணவு வழங்கும்  வீடியோ மூலம் பசி , பட்டினியின் கொடுமையை உணர்ந்த சிறுமி ரித்தி,  தனது சேமிப்பில் இருந்து சிறிது பணத்தை சேகரித்தார் , மேலும்  உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்கொடை தருமாறு கோரிக்கையை முன்வைத்தார்.குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன்,₹ 1.2 லட்சம் வசூலிக்க முடிந்தது அதில்  200 கிட்களை தயாரிக்கப்பட்டது.

ஒரு ஒரு கிட்டிலும்  5 கிலோ அரிசி, 1 கிலோ உப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் இரண்டு சோப் பார்கள் ஆகிய ஆறு பொருட்களைக் கொண்ட இந்த கிட் ₹.650 மதிப்பிலானது.

கிட்களை பெறாத நிறைய பேர் இருப்பதாக தன் பெற்றோர் மூலம் தெரிந்து கொண்ட ரித்தி அதிக பணம் திரட்ட என்ன செய்வது என்று யோசித்தபோது ,கிரௌட்  ஃபண்டிங் வலைத்தளம்  பற்றி  ரித்தி மற்றும் அவரது பெற்றோர்  அறிந்ததும், லாக் – டோவ்ன் போது வேலை இழந்த மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் இல்லாத தினசரி கூலி தொழிலாளர்களுக்கு உதவ பத்து நாட்களுக்கு முன்பு ஒரு ஆன்லைன் முறையீட்டை முன்வைத்தனர்.

அவரது முறையீட்டிற்கு மக்கள் ஆதரவு அளித்தனர் , ₹6.2 லட்சம் நன்கொடைகள் திரட்டப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு  உணவுப் பொருட்களை வாங்க இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என ரித்தி தெரிவித்தார். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர்கள் கிட்களை பேக் செய்ய உதவி உள்ளதாகவும் தெரிவித்தார் ரித்தி.

சிறுமியின் இந்த சேவை குணத்தை பாராட்டி , குடியரசுத் துணை தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 6.20 லட்ச ரூபாய் நிதி மூலம், 5 கிலோ அரிசி, ஒரு கிலோ உப்பு, ஒரு லிட்டர் எண்ணெய், சோப்புகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட தொகுப்பை ஏழை எளியோருக்கு இலவசமாக வழங்கியுள்ளார். சிறுமியின் செயல் மூலம் இந்திய நாடு பகிர்ந்து அளித்து அக்கறை கொள்ளும் நாடு என்ற பழமொழி உண்மையாகியுள்ளதாக குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.