பல்லிகளை ஒழிக்க இதுதான் சிறந்த வழி..!
பல்லிகள் வீட்டில் சுற்றித் திரிவது சிலருக்கு அருவருப்பை உண்டாக்கும். வீட்டின் அழகை கெடுப்பதாகவும் உணர்ந்தால் சில வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள். பல்லிகள் வீட்டிற்குள் நெருங்காது. பிரியாணி போன்ற உணவுகளில் சேர்க்கப்படும் பிரிஞ்சு இலைகளை எரித்து அதன் புகையை வீட்டில் பரப்பினால் பல்லி வீட்டில் தங்காமல் ஓடிவிடும். வெங்காயத்தை வெட்டி பல்லி வரும் மூலைகளில் வைத்தால் வராது அல்லது வெங்காயத்தை அரைத்து அதன் சாறை மூலைகள், ஜன்னல்களில் தெளித்து விட்டால் அதன் நெடி தாங்க முடியாமல் உள்ளே வராது. காஃபி பொடியைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளுங்கள். பல்லி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு அந்த உருண்டைகளை வைத்தால், பல்லி அதைச் சாப்பிட்டு இறந்துவிடும். இல்லையெனில் வீட்டிற்குள் வராமல் ஓடிவிடும்.
பூண்டின் வாசனை பல்லிகளுக்குப் பிடிக்காது. பூண்டை பல்லி சுற்றும் இடங்களில் வையுங்கள். அது அடிக்கடி தங்கும் இடத்தில் குறைந்த அளவு பூண்டு பற்களைக் குவித்து வையுங்கள். இல்லையெனில் பூண்டுப் பற்களை அரைத்து அதன் நீரை தெளியுங்கள். பல்லி பயம் இனியும் இருக்காது. பல்லிக்கு மிளகின் வாசனை மற்றும் அதன் காரத்தன்மை முற்றிலும் ஒத்துக்கொள்ளாது. மிளகைத் தண்ணீரில் நன்கு ஊற வைத்து மிக்ஸியின் மைய அரைத்து அதன் நீரை மட்டும் வடிகட்டி அதை வீட்டுச் சுவர்களில் ஸ்பிரே செய்தால் பல்லி வீட்டை விட்டு ஓடிவிடும். இது பொதுவாக பலரின் வீடுகளில் பயன்படுத்தக் கூடியதுதான். பீரோக்களில் வாசனைக்காக வைக்கப்படும். இது வாசனைக்கு மட்டுமல்ல பல்லியின் தொந்தரவை போக்கவும் உதவும். பல்லி வரும் இடங்களில் இதை வையுங்கள்.
ஃபிளை பேப்பர் பொதுவாக ஈ தொந்தரவு, வண்டு போன்ற பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க வீட்டில் கட்டி வைப்பார்கள். இது பல்லியின் அட்டகாசத்தை ஒழித்துக்கட்டவும் உதவும். சுவரில் இதை ஒட்டி வைத்தால் பல்லி அந்தப் பேப்பரில் அப்படியே ஒட்டிக் கொள்ளும். இது சூப்பர் மார்க்கெட், ஹோம் நீட் ஸ்டோர்களிலும் கிடைக்கும். குளிர்ச்சியான நீரை பல்லியைப் பார்க்கும் போதெல்லாம் அதன் மீது ஸ்பிரெ செய்தால் அது தெறித்து ஓடும். மயில் பல்லியை உண்ணக் கூடியது. எனவே மயில் தோகையை பல்லி வரும் இடங்களில் வைத்தால் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். மயில் பல்லியை உண்ணக் கூடியது. எனவே மயில் தோகையை பல்லி வரும் இடங்களில் வைத்தால் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.