தகவல்கள்

டிப்ரெஸ்ஸன், இன்சோம்னியா பிரச்சனைகள் தீர எளிய வீட்டு வைத்தியம்…

இன்றைய திகதியில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதேபோல் இதற்காக தூக்கமாத்திரையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் 15 லிருந்து 20 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ‘நீங்கள் எப்போது நிம்மதியாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டால் யாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து வரும் ஒரே பதில் ‘தூங்கும்போது மட்டும்தான்!’ இந்தத் தூக்கம்தான் வாழ்க்கையில் அனைவருக்கும் இருக்கும் ஒரே சுகம். மூளைக்காக மூளையே ஏற்படுத்திக்கொண்ட ஓய்வுதான் இந்தத் தூக்கம்!

இன்றைய பரபரப்பான, இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் பெரும்பாலானவர்கள் தூக்கமின்றித் தவிக்கிறார்கள்.அந்தக் காலத்தில் உடல் உழைப்புச் செய்து வந்த மனிதனுக்குத் தூக்கம் தேடி வந்தது. தற்போது மூளை உழைப்பு அதிகமானதால் தூக்கத்தைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இன்றைய காலத்தில். தூக்கமின்மை எப்போது தோன்றியிருக்கலாம்? அதையும் கண்டுபிடித்து விட்டார்கள்! அதாவது, 1879-ம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடித்த பிறகுதான் தூக்கமின்மை விழித்துக் கொண்டதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.அதனால்தான், உறக்கத்தை மின்சார பல்பு கண்டுபிடிப்பதற்கு முன்பு, மின்சார பல்பு கண்டுபிடித்ததற்கு பின்பு என்று பிரிக்கின்றனர்.

 

இருட்டையே பழகிக்கொண்ட மனிதன் ஆரம்ப காலத்தில் கிட்டத்தட்ட 10 மணிநேரம் தூங்கினான். பல்பு கண்டுபிடித்த பின்பு, தூக்கத்தின் நேரம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. தொலைக்காட்சி, சினிமா, இன்டர்நெட், மெயில் என்று புதிது புதிதாய் வர 10… 8… 6… என்று குறைந்துபோனதாம் தூக்கம்.அதாவது, 8 மணிநேரம் தூக்கம்… 8 மணிநேரம் உழைப்பு… 8 மணிநேரம் மற்ற வேலைகள் என்று பிரித்து வைக்கப்பட்டது. இன்றைக்கு அதுவும் குறைந்து வருவது கொஞ்சம் கவலைக்குரிய விஷயம்தான்.

பணிச்சுமை, பணி நேரம், இரவு நேர பணி, மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம், தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சு திணறல் போன்ற பல காரணங்களால் தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள். அதிலும் தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சு திணறல் காரணமாக தூக்கமின்மைக்கு ஆளாகுபவர்கள் தான் பலவிதங்களில் பாதிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு பகலில் உறக்கம் வரும், காலையில் தலைவலியுடன் எழ நேரிடும். இரவிலோ அல்லது காலையில் எழுந்தவுடனோ தொண்டை வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். சிலருக்கு இரவு நேரத்தில் வியர்க்கும். இரவில் இரத்த அழுத்தம் உயரக்கூடும். கழுத்து வலி கூட ஏற்படலாம்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.