உணவுகள்நாகரிகம்

சாப்பாட்டின் மீது ஒரு கண் வையுங்கள்.. பார்வை பறிபோகலாம்

வயதான வயதில் ஆரோக்கியமற்ற உணவுக்கும் பார்வை இழப்புக்கும் இடையிலான தொடர்பை சமீபத்திய ஆய்வில் கண்டறிந்ததால், நீங்கள் சாப்பிடுவதைக் கவனியுங்கள்.

சுமார் இருவது ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தபின், சிவப்பு இறைச்சி, வறுத்த உணவுகள், அதிக கொழுப்புள்ள பால், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் நிறைந்த உணவு கண்பார்வை மோசமாக பாதிக்கும் என ஆய்வின்  முடிவுகள் காட்டுகின்றன. பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஆப்தமாலஜி வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, ஆரோக்கியமற்ற உணவுகள் நிறைந்த உணவுக்கும் வயது தொடர்பான மாகுலர் சிதைவுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாகக் கூறுகிறது.

சிவப்பு இறைச்சி, வறுத்த உணவுகள் போன்ற உணவுகள் இருதய நோய் ஆபத்து மற்றும் உடல் பருமனை பாதிக்கிறது என்பதை பெரும்பாலானவர்கள் அறிந்து இருப்போம். இருப்பினும், பிற்காலத்தில் பார்வை இழப்பு ஏற்படும் அபாயத்தை  இந்த உணவுகள் கொண்டுஉள்ளது என  நாம் நினைத்து இருக்க மாட்டோம்.

AMD என்பது வயது தொடர்பான கண்ணின் பின்புறத்தில் விழித்திரையில் ஏற்படும் குறைப்பாடு ஆகும். ஒருவரின் உணவு  முறை AMD இன் ஆரம்பகால வளர்ச்சி மற்றும் பிற்பட்ட நிலை நோய் இரண்டையும் எவ்வாறு கணிக்கக்கூடும் என்பதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள்  “ஆரம்ப ஏஎம்டி இல்லாதவர்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் , ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்குப் பிறகு பார்வையில் , குறைபாடுகள் உண்டாக   வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்”.

இவ்வாய்பில், 66 வகையான உணவினங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டனர் . பின்னர் அவை ஆரோக்கியமானவை, பதப்படுத்தப்பட்டவை, பொறிக்கப்பட்டவை, மேற்கத்திய பாணி உணவு என்று வகைப்படுத்தப்பட்டன. உணவுப்பழக்கத்துக்கும் விழித்திரை மாக்குலர் சிதைவுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறியவில்லை என்றாலும், மேற்கத்திய உணவுமுறையைப் பின்பற்றுவோரிடம் மற்றவர்களைவிட மூன்று மடங்கு விழித்திரை மாக்குலர் சிதைவுக்கான வாய்ப்பு இருப்பதை அறியமுடிந்தது. எனவே நீங்கள்  மேற்கத்திய உணவுமுறையைப் விரும்புவராக இருந்தால், இந்த ஆய்வின் முடிவை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.