3D மாஸ்க்கினால் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பிய காலேஜ் ட்ரோப் அவுட் ஆன இளைஞன்
கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவதையே அரசு முதன்மை வழிகாட்டுதலாக அறிவுறுத்திவருகிறது. பாமர மக்கள் முதல் அதிகாரிகள் வரை பெரும்பாலானோர் முகக்கவசத்துடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சிலநாள்களாக 3டி மாஸ்க் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மெல்லிய பிளாஸ்டிக் காகிதத்தால் எளிதில் கழற்றி மாட்டும் வகையில் இருக்கிறது இந்த 3டி மாஸ்க். இதன் பயன்பாடு மேலைநாடுகளைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அதிகரித்துவருகிறது.
சென்னையில் உள்ள பல சிறிய நிறுவனங்கள் 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு முகக் கவசங்களை உருவாக்க தொடங்கியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த சுரேந்திரநாத் ரெட்டி இன்ஜினீயரிங் ட்ரோப் அவுட் ஆனா பிறகு 3d பிரின்டிங் தொழிலை தொடங்கினார். தமிழ்நாட்டில் முதல் நபராக 3டி மாஸ்க் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவருகிறார். காவல்துறையினர் உட்பட பலருக்கும் தினமும் இலவசமாகவும் 3டி மாஸ்க் வழங்குகிறார்.
“ ‘3Ding’ என்ற பெயர்ல 3டி பிரின்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தை நடத்திட்டிருக்கேன். குறிப்பிட்ட சில பொருள்களை கம்யூட்டரில் டிசைன் செய்தால், அதை அந்த மெஷின் வாயிலாகவே உருவாக்க முடியும். ஆட்டோமொபைல், மருத்துவ உபகரணங்கள் உட்பட பல்வேறு பொருள்களைத் தயாரிக்கிறேன்.
தற்போதைய சூழலில் மாஸ்க்குக்கான தேவை அதிகம் இருக்கு. நார்மல் காட்டன் மாஸ்க்கைவிடவும், கொரோனா பாதிப்பு உடையவங்க மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்புத் திறனுடைய மாஸ்க்தான் பாதுகாப்பானது. அந்த வகையில் 3டி மாஸ்க் கூடுதல் பாதுகாப்புத் திறனுடையதாக உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
நார்மல் காட்டன் மாஸ்க் அணிந்து, அதன்மீதுதான் 3டி மாஸ்க் அணிவது கூடுதல் பாதுகாப்பாக இருக்கும். அதிகபட்சம் 24 மணிநேரத்துக்கு ஒரு 3டி மாஸ்க்கைப் பயன்படுத்தலாம்.