கர்ப்பிணி யானையைத் தொடர்ந்து “தெருநாய்க்கு” நிகழ்ந்த கொடூரம்.!!
கேரளாவில் வெடிமருந்து நிரப்பப்பட்ட தேங்காயை உண்ட கர்ப்பிணி வாய் வெடித்து சிதறி உயிரிழந்த சம்பவத்தின் துயரம் அடங்குவதற்குள், அங்கு மேலும் ஒரு விலங்குக்கு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடிமருந்து நிரப்பப்பட்ட தேங்காயை உண்ட கர்ப்பிணி யானை, இரு வாரங்களுக்குப் பிறகு, உணவு உண்ணமுடியாமல், தண்ணீரில் நின்றபடியே உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில், கேரளாவில் தெருநாய்க்கு நேர்ந்த கொடூர சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இரு வாரத்திற்கு முன்பு திருச்சூர் விலங்குகள் நல அமைப்பு வந்த அழைப்பில், ஒல்லூர் பகுதியில் தெருநாய் ஒன்று, வாயில் டேப் சுத்தப்பட்ட நிலையில், உணவு உண்ண முடியாமல் தவிப்பதாக தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விலங்குகள் நல வாரியம் உறுப்பினர்கள், அந்த நாயை ஊர் முழுவதும் தேடி வந்தனர்.இந்த நிலையில், தற்போது அந்த நாயை கண்டுபிடித்த விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள், அதன் வாயில் சுற்றியிருந்த பல அடுக்கு டேப்பை பிரித்தனர். அப்போது, அழுத்தி டேப் ஒட்டியதால், அதன் நாசி எழும்புகள் முறிந்து போயிருந்தது. அந்த டேப்பை கழற்றிய பிறகு, சுமார் 2 லிட்டர் தண்ணீரை அந்த நாய் குடித்ததாக, விலங்குகள் நல வாரிய அமைப்பினர் வேதனையுடன் தெரிவித்தனர்.
“மீட்கப்பட்ட நாயுக்கு கால்நடை மருத்தவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அதன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. தயவு செய்து யாரும் விலங்குகளை துன்புறுத்த வேண்டாம்”, எனக் கேட்டுக் கொண்டார் விலங்குகள் நல அமைப்பின் செயலாளர் ராமச்சந்திரன்.