
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு குடும்ப ஆடியன்ஸ்களையும் ஒரு வருடத்திற்கு பின்னர் திரையரங்குகளுக்கு வரவழைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
’மாஸ்டர்’ படம் ரூபாய் 200 கோடி இரண்டே வாரங்களில் வசூல் செய்து சாதனை செய்து உள்ள நிலையில் இன்னும் பல திரையரங்குகளில் இந்த படத்திற்கு கூட்டம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி ’மாஸ்டர்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலீஸான 16 நாட்களில் ஒரு மாஸ் நடிகரின் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருப்பதாக வந்துள்ள செய்தி மிகப் பெரிய ஆச்சரியமான தகவலாக உள்ளது. ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும்போது ஓடிடியில் வெளியானால் திரையரங்குகளில் வசூல் பாதிக்கும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பினர் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.
அமேசான் ப்ரைம் நிறுவனம் ’மாஸ்டர்’ படம் ரிலீஸாகும் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.