சென்னை
ட்ரெண்டிங்

கொரோனாவால் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய விடாமல்,கற்களை வீசி தாக்கிய மக்கள்; 7  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு 

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய கொடும் சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருந்த, 55 வயதான, நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர் சைமன் ஹெர்குலஸ், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.உயிரிழந்த மருத்துவரின் மகள் வானகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான், அந்த மருத்துவரின் உடல் நேற்று இரவு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயான பகுதியில் அடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டது. ஆனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டு மருத்துவர் உடலை தங்கள் பகுதியில் அடக்கம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

மருத்துவரின் உடலில் இருந்து கொரோனா வைரஸ் நோய் தங்கள் பகுதிக்கு வேகமாக பரவி விடும் என்று, அச்சம் கொண்ட மக்கள்.மருத்துவர் உடலை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் மீது கற்களை வீசி கொடூர தாக்குதல் நடத்தினர். கம்புகளை எடுத்து வந்து ஓட்டுநரையும் அடித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொதுமக்கள் தாக்கியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் படுகாயம் அடைந்துள்ளார். மோசமான நிலைக்கு சென்ற அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.எனவே  கூட இருந்த இன்னொரு டாக்டர்தான் வாகனத்தை இயக்கிக் கொண்டு சென்று உள்ளார்.பின்னர்  காவல்துறையினர் தலையிட்டு  இரவு 1 மணியளவில் டாக்டரின் உடல் வேளாங்காடு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்தவாரம் ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவர் சென்னையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானார். அவர் உடலை அடக்கம் செய்யப் போகும் போதும் இதே போன்று உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பெரும் பிரச்சனை செய்தனர். இப்படியான நிலைமை தொடர்கதையாகி வந்தால் மருத்துவர்கள் மத்தியில் சிகிச்சை அளிப்பதற்கான ஆர்வமே போய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை தாக்கியதாக 20 ஆண்கள், 5 பெண்கள் மீது  அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், ஆயுதங்களால் தாக்குதல் போன்ற  7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இறந்தவர் உடலை  உரிய பாதுகாப்புடன் அடக்கம் செய்யும்போது, உடலிருந்து நோய் வேறு மக்களுக்கு பரவாது என்ற விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததுதான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு காரணம் என்று மருத்துவர் சங்கம் கூறப்படுகிறது. இறந்தவரின் உடலிலிருந்து கொரோனா பரவாது, அது தொடர்பாக எந்த ஒரு அறிக்கையும் இதுவரை வெளியாகியது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

மக்களுக்காக சேவையாற்றியவரின் உடலை அடக்கம் செய்வதை எதிர்ப்பது மனிதாபிமானம் அற்றது என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.பீலா ராஜேஷ் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் சைமன் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

 

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.